Wednesday, June 24, 2026 2:07 pm
தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றிற்குள் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முக்கிய சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தகவலின்படி சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி நேற்று வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் பஸ்ஸில் பயணிப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து யாழ்ப்பாணக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் வலன ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்களை நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றினுள் பெண்ணின் சடலம் இருப்பதாக தொலைபேசி மூலம் தெல்தெனிய பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொலிஸார் குறித்த பகுதியில் தேடுதல் மேற்கொண்ட நிலையில் அந்தக்காருக்குள் இறந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவர் அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றிய வெலிகமவைச் சேர்ந்த 33 வயதுடைய பிசியோதெரபிஸ்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணும் அவரது காதலனும் நுவரெலியாவில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது அவரது காதலர் அவரைத் தூக்கிச் செல்லும் காட்சி ஹொட்டலின் சிசிடிவி கமராவில் பதிவாகியிருந்தது.
காதலன் தலைமறைவாக இருந்த நிலையில் யாழில் வைத்து கைது செய்யப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

