Tuesday, June 23, 2026 9:38 pm
மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகளை முன்னிட்டு, தலைநகர் தெஹ்ரானில் மூன்று நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
“தியாகம் செய்த தலைவரின் உடலுக்கான இறுதி அஞ்சலி,பிரார்த்தனைகள் தெஹ்ரானின் கிராண்ட் மொசல்லாவில் ஜூலை 4 , 5 ஆகிய சனி , ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். இறுதிச் சடங்கு ஜூலை 6, ஆம் திகதி திங்கட்கிழமை அன்று நடைபெறும். இந்த மூன்று நாட்களுக்கு தெஹ்ரான் மாகாணத்திற்கு விடுமுறை அளிக்கப்படும்,” என இறுதிச் சடங்குகளுக்குப் பொறுப்பான ஐ.ஆர்.ஜி.சி தளபதி ஹசன் ஹசன்சாதே கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, தெஹ்ரானுக்கு ஜூலை 4 , 5 ஆகிய திகதிகளில் விடுமுறை அளிக்கப்படும் என்றும், ஜூலை 6 அன்று நாடு முழுவதும் விடுமுறை பின்பற்றப்படும் என்றும் அரசு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

