Thursday, June 18, 2026 1:50 pm
கடந்த சில மாதங்களாக மேற்காசியாவில் நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமெரிக்காவும் ஈரானும் 14 அம்ச இடைக்கால அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
பிரான்ஸின் வேர்சாய் அரண்மனையில் இந்த ஒப்பந்தம் உத்தியோகப்பூர்வமாக கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன்போது பாகிஸ்தான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்துள்ளன. இந்த உத்தியோகப்பூர்வ ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
பிரான்சின் வேர்சாய் அரண்மனையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
14 அம்ச இடைக்கால ஒப்பந்தத்தில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருதல் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் குறித்த தளர்த்தல்கள் ஹோர்முஸ் நீரிணை ஊடான கடல்சார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குவிதிகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வந்த 110 நாட்கள் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் சர்வதேச பயணங்கள் விமானப் போக்குவரத்து மற்றும் வணிக நடவடிக்கைகளில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படுவதால் உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் நிலவி வந்த பதற்றம் தணிந்து எரிபொருள் விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

