Wednesday, May 27, 2026 3:38 pm
பெண்கள், குழந்தைகள்ளின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையின்கீழ் “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அதிரடிப்படை தனித்துவமாக தெரியும் வகையில் பிரத்யேகச் சீருடை மற்றும் புதிய சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்தில் தைரியம், வேகம் ,அறிவுத்திறனைப் பறைசாற்றும் வகையில் சிங்கத்தின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது.
களப்பணியில் துரிதமாச் செயல்படும் வகையிலும், ரோந்து பணிகளை எளிதாக்கும் வகையிலும் இந்த சீருடைகள் நவீன தொழில்நுட்பத்துடன் தைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இந்த அதிரடிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபடுவதால், குற்றவாளிகள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது. குறிப்பாக, மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் அருகே பாதுகாப்பை பலப்படுத்துவதே இந்த அமைப்பின் முதன்மை நோக்கம்.

