Monday, May 11, 2026 8:12 pm
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கிறது. 30 இடங்களைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவையில், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு 16 இடங்கள் தேவை என்ற நிலையில், இக்கூட்டணி 18 இடங்களைக் கைப்பற்றி வலுவான நிலையில் உள்ளது. புதுச்சேரியில் மீண்டும் ரங்கசாமி மே 13-ல் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி, ரங்கசாமி தலைமையில் புதிய ஆட்சியை அமைக்க உள்ளது. என்.ஆர். காங்கிரஸ் 12 இடங்கள், பா.ஜனதா 4, அ.தி.மு.க , எல்.ஜே.கே தலா ஒரு இடம் என மொத்தம் 18 தொகுதிகளில் இக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
ஆட்சி அமைக்க 16 எம்.எல்.ஏ-க்களின் பலம் தேவை என்ற நிலையில், கூட்டணிக்கு 18 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் ரங்கசாமி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் துணைநிலை ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஜனாதிபதியின் ஒப்புதல் முறைப்படி கிடைத்ததைத் தொடர்ந்து, மே 13-ஆம் தேதி (புதன்கிழமை) ரங்கசாமி முதலமைச்சராகப் பதவியேற்க வருமாறு ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.
பா.ஜகவுடன் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா நடத்திய பேச்சுவார்த்தையில், கடந்த முறையைப் போலவே பாஜகவுக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்க ரங்கசாமி சம்மதித்துள்ளார். கடந்த முறையைப் போலவே சபாநாயகர் பதவி பா.ஜனதாவுக்கு வழங்கப்பட உள்ளது.

