Thursday, April 30, 2026 2:40 pm
ஓன்லைன் கேமிற்கு அடிமையான மாணவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் யாழில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய மாணவனே நேற்று தனது உயிரை மாய்த்துள்ளார்.
கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கணிதப் பிரிவில் குறித்த மாணவன் கல்வி கற்று வரும் நிலையில் மாணவன் தவிர்ந்த அவரது வீட்டில் உள்ள அனைவரும் விசேட தேவையுடையவர்களாக காணப்படுகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் உயிரிழந்த மாணவன் தொலைபேசி விளையாட்டிற்கு அடிமையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்மாய்க்கும்போது வித்தியாசமான முறையில் குறித்த மாணவன் ஆடை அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

