Wednesday, April 29, 2026 2:39 pm
கோதுமை மாவின் விலையை இன்று வியாழக்கிழமை(29.04.2026) முதல் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 5 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
போக்குவரத்துச் செலகவுளின் அதிகரிப்பே இவ்விலை உயர்விற்கான காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பிற்கு அமைய, இதற்கு முன்னர் 220 ரூபாவாகக் காணப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் புதிய விலை 225 ரூபாவாக அதிகரித்துள்ளது.

