Wednesday, April 29, 2026 1:48 pm
மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் , புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியாகிறது.
அசாம், கேரளா, புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய 3 சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 9ம் திகதி முடிந்தது. தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக கடந்த 23ம் திகதி தேர்தல் முடிந்தது. மேற்குவங்கத்தில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி முதல்கட்ட தேர்தல் 23-ல் முடிந்தது. இன்று 2-ம் கட்ட தேர்தல் முடிவடைகிறது. இத்துடன் இன்று மாலை 6 மணியுடன் 5 மாநில தேர்தல் முடிவுக்கு வருகிறது.
இதனால், அனைவரின் பார்வையும் இப்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின் மீது திரும்பியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்து 30 நிமிடங்களுக்குப் பிறகுதான் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட வேண்டும்.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று மாலை 6.30 மணிக்கு மேல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

