Saturday, October 10, 2026 5:48 pm
னக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார். நான் நிறைய போர்களை நிறுத்தியிருக்கிறேன். ஆனால் எனக்கு நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை என கடந்த வருடமே அவர் ஆதங்கப்பட்டார்.
தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் நவி பிள்ளைக்கு நடப்பாண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். நியுயார்க்கின் சைராகுஸ் நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசியட்ரம்ப் ‘ஜனநாயகத்திற்கு எதிரானவர்களால் அமைதிக்கான நோபல் பரிசு நிரந்தரமாக தனது மதிப்பை இழந்துவிட்டது.
இந்தியா – பாகிஸ்தான் உட்பட 8 போர்களை நான் தடுத்து நிறுத்தியிருக்கிறேன். ஒரு நோபல் பரிசுக்கு பதிலாக 8 நோபல் பரிசு எனக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.. உலக அமைதிக்காக போராடிய என்னை விட்டுவிட்டு ஐநாவில் பணியாற்றிய யாருக்குமே தெரியாத இஸ்ரேலை வெறுக்கும் நபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது’ என ஆதங்கப்பட்டு பேசியிருக்கிறார்.

