Saturday, October 10, 2026 5:42 pm
டில்லியில் நடைபெறும் போராட்டத்தில் கல்ந்துகொள்வதற்காக கரப்பான் பூச்சி கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே மும்பையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.. அவர் டெல்லி விமான நிலையத்திற்கு வந்ததும் விமானத்தில் வைத்து டெல்லி போலீஸார் அவரை கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளனர். அவர் மட்டுமல்லாமால் கேரள முன்னாள் முதல்வர் பிரணாயி விஜயன் உள்ளிட்ட பலரும் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் இளைஞர்கள் டெல்லியில் உள்ள சந்திர் மந்தரில் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக தர்மேந்திர பிரதான் பதவி விலக நேர்ந்தது. இந்நிலையில்,SIR முறைகேடு காரணமாக தலைமை தேர்தல் ஆணையர் நானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் உள்ள சந்திர் மந்தரில் அக்டோபர் 10ஆம் தேதி இன்று போராட்டம் நடத்தப் போகிறோம் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது.
இன்று காலை பலரும் ஜந்தர் மந்தர் நோக்கி செல்ல தயாரானார்கள். அவர்களை டெல்லி போலிஸார் தடுத்தி நிறுத்தினர். ஜந்தர் மந்தருக்கு செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இரயில், பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
அ

