Tuesday, April 28, 2026 1:29 pm
2026 ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் அணி பெற்ற பின்னடைவு கிரிக்கெட் உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசமான சாதனையை டெல்லி அணி தனது சொந்த மண்ணிலேயே பதிவு செய்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
துடுப்பெடுத்தாடிய முதல் ஓவரிலேயே டெல்லி கேபிடல்ஸ் அணியின் சரிவு ஆரம்பமானது. புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்திலேயே சாஹில் பராக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் கே.எல். ராகுல் 1 ரன்னுடன் வெளியேற அதே ஓவரில் சமீர் ரிஸ்வியும் ‘டக்-அவுட்’ முறையில் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
டெல்லி அணி பவர்பிளே முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே பவர்பிளே ஓவர்களில் எடுக்கப்பட்ட மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும்.
டெல்லி அணியின் முதல் 6 துடுப்பாட்ட வீரர்கள் இணைந்து எடுத்த மொத்த ரன்களின் எண்ணிக்கை வெறும் 7 மட்டுமே.
பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசல்வுட் ஆகியோர் அனல் பறக்கும் பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.
ஐபிஎல் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் பவர்பிளே ஓவர்களுக்குள்ளேயே இரண்டு பந்துவீச்சாளர்கள் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.
3 ஓவர்களில் 5 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார் புவனேஷ்வர் குமார்.
3 ஓவர்களில் 8 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார் ஜோஷ் ஹேசல்வுட்.
அணியின் முக்கிய வீரர்களான நிதிஷ் ராணா 1 ரன்னிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 5 ரன்னிலும் வெளியேறினர். கேப்டன் அக்சர் படேல் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பியது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியது.
7 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்த டெல்லி அணியை அபிஷேக் போரல் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி ஓரளவுக்குச் சரிவிலிருந்து மீட்கப் போராடியது. 7 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 25 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வெறும் 75 ஓட்டங்களுக்கு சுருட்டி இந்தத் தொடரின் மிக முக்கியமான வெற்றிகளில் ஒன்றினை பதிவு செய்தது.
ஹேசல்வுட் தனது சிறப்பான பந்துவீச்சால் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி தனது ஓவர்கள் முழுவதும் அழுத்தத்தைத் தக்கவைத்துக் கொண்டார். அதேபோன்று புவனேஷ்வர் குமாரும் ஹேசல்வுட்டின் முயற்சிக்குத் துணையாக நின்றார்.
வெறும் 15 ஓவர்களில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 75 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்த RCB அணி தமது இலக்கை எளிதாகத் துரத்திப் பிடித்து வெறும் 6.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 79 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றி ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வலுவான பந்துவீச்சுத் தாக்குதலை எடுத்துக்காட்டுவதோடு மட்டுமல்லாமல் நெருக்கடியான சூழ்நிலைகளிலும் சிறப்பாகச் செயல்படும் அவர்களின் திறனையும் வெளிப்படுத்துகிறது.
போட்டியின் நாயகனாக 12 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜோஷ் ஹேசல்வுட் தெரிவானார்.
அதுமட்டுமன்றி இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் வரலாற்றில் 9000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை இந்தப் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் தலைவரும் மூத்த வீரருமான விராட் கோலி பெற்றுள்ளார்.

76 ஓட்டங்கள் என்ற எளிதான இலக்கை நோக்கிய சேஸிங்கில் இரண்டு சிக்ஸர்களை துரத்திய விராட் கோலி 15 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 23 ஓட்டங்களை எடுத்தார்.
ஐபிஎல் அரங்கில் ஒட்டுமொத்தமாக 275 போட்டிளில் 267 இன்னிங்ஸுகளில் 40.05 சராசரி மற்றும் 133.05 ஸ்டிரைக் ரேட்டுடன் 9012 ஓட்டங்களை விராட் கோலி எடுத்துள்ளார். இதில் எட்டு சதங்கள் 66 அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை 113 ஆகும்.
நடப்பு சீசனில் எட்டு போட்டியில் 58.50 சராசரியில் 351 ஓட்டங்கள் எடுத்தும் 162.50 ஸ்டிரைக் ரேட்டுடன் மூன்று அரைசதங்கள் மற்றும் 81 என்ற அதிகபட்ச ஓட்டங்களுடன் ஆரஞ்சு கேப் போட்டியில் தற்போது நான்காவது இடத்தில் உள்ளார்.
கடந்த 25ம் திகதி டெல்லி அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 20 ஓவர்களில் 264 ரன்கள் குவித்தது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. 2 நாள்கள் கழித்து அதே மைதானத்தில் 75 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
ரசிகர்கள் ரன்மழையை எதிர்பார்த்துக்கொண்டிருக்க ஆர்சிபி பௌலர்கள் அதிரடியாக வீசிய பந்துவீச்சில் சுருண்டது டெல்லி அணி.
கடந்த போட்டியில் 20 ஓவர்களும் களத்தில் இருந்து ஆட்டமிழக்காமல் 152 ரன்கள் குவித்த கே.எல்.ராகுல் இந்தப் போட்டியில் 1 ரன்னுடன் ஆட்டமிழந்தார்.
டெல்லி கேபிட்டல்ஸ் 16.3 ஓவர்களில் எடுத்த ஸ்கோரை 6.3 ஓவர்களில் சேஸ் செய்து இந்த சீசனில் தங்களின் 6வது வெற்றியைப் பதிவு செய்தது ஆர்சிபி.

