Thursday, March 5, 2026 3:30 pm
ஐசிசி T20 உலக கிண்ண தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மும்பை – வான்கடேயில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
நடைபெறவுள்ள குறித்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன.
நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்று நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெறும்.
ஏற்கனவே இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நியூசிலாந்து அணியுடன், இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

