Tuesday, July 14, 2026 1:25 pm
அதிநவீன வான்வழி கண்காணிப்பு விமானத்தை இரானுக்கு அனுப்பி வைத்திருப்பதன் மூலம், ஈரானுக்கு ஆதரவாக நேரடியாக ரஷ்யா களம் இறங்கியிருப்பது அமெரிக்காவிற்கு தெரியவந்துள்ளது. அமெரிக்கா மட்டுமின்றி மொத்த உலக நாடுகளுமே இந்த போரின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
அமெரிக்கா-ஈரான் போரில் வேடிக்கை மட்டும் பார்த்து வந்த ரஷ்யா முதல் முறையாக களம் இறங்கி உள்ளது. ரஷ்யாவின் அதிநவீன ராணுவக் கட்டுப்பாட்டு விமானத்தை ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு புட்டின் அனுப்பி வைத்துள்ளார். டூபோலெவ்-214 பி என்ற இந்த கண்காணிப்பு விமானம் ‘உலக அழிவு நாள்’ (டூம்ஸ்டே) விமானம் என்று உலக நாடுகளால் அழைக்கப்படுகிறது. போர் அல்லது தேசிய அவசரநிலைகளின் போது, வான்வழியாக இருந்து கொண்டே ஒட்டுமொத்த ராணுவ செயல்பாடுகளையும் வழிநடத்தப் பயன்படும் ஒரு நடமாடும் கட்டுப்பாட்டு மையமாக இந்த விமானத்தை ரஷ்யா பயன்படுத்தி வருகிறது.
அதிநவீன தகவல் தொடர்பு அமைப்புகள், செயற்கைக்கோள் இணைப்புகள் ,மின்னணு போரைச் சமாளிக்கும் ‘ஜாமீங்’ எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் இந்த டூம்ஸ்டே விமானத்தில் இருக்கிறது.. ரஷ்யாவின் மிக உயர்மட்ட அரசியல் மற்றும் ராணுவத் தலைவர்களை ஏற்றிச் செல்லும் சிறப்பு ரஷ்ய விமானப்படை பிரிவு மட்டுமே இந்த விமானத்தை இயங்கும். அந்த அளவிற்கு விசேஷமான விமானம் ஆகும்.
அமெரிக்காவின் தீவிரத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் ஈரானுக்கு, ரஷ்யா தனது செயற்கைக்கோள் படங்கள் ,உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு வருகிறதாம். அத்துடன் உயர்மட்ட ராணுவ ஆலோசனைகளை நடத்துவதற்கும் இந்த விமானம் உதவி செய்யுமாம். இந்த தகவலை பாதுகாப்பு ஆய்வாளர்கள் முன் வைக்கிறார்கள். ஈரான் அமெரிக்கா இடையேயான போரில், ஈரானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம் என்பதை ரஷ்யா இதன் மூலம் உலக நாடுகளுக்கு அறிவித்துள்ளது.

