Monday, February 2, 2026 12:20 pm
கண்டி, பல்லேகலவில் நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி இலங்கையை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரை இங்கிலாந்து 1:1 என்ற கணக்கில் சமன் செய்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழந்து 189 ஓட்டங்களை குவித்தது.
இங்கிலாந்து 7.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 57 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. இதனால் டக்வெத் லூயிஸ் முறைப்படி 190 ஓட்டங்கள் என்ற அசல் இலக்கு 17 ஓவர்களில் 168 ஆக திருத்தப்பட்டது.
இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் மற்றும் இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கினை கடந்தது
போட்டியின் ஆட்டநாயகனாக டோம் பென்டன் தெரிவானார்.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டி நாளை நடைபெறும்.

