Monday, November 23, 2026 8:21 pm
பாகிஸ்தானில் தஞ்சமடைந்த ஆப்கான் அகதிகளில் 85 முதல் 90 சதவீத ஆப்கானிய அகதிகள் கடந்த தாயகம் திரும்பியுள்ளனர் என்று ஆப்கானிஸ்தானின் தூதர் சர்தார் அகமது ஷகீப் கூறியுள்ளார். இவ்விரு நாடுகளும் மில்லியன் கணக்கான ஆப்கானியர்களைத் தாயகம் திரும்ப அழைத்து வரும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
பாகிஸ்தானில் புதிதாக நியமிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஆணையத்தின் (UNHCR) தலைவர் நோரிகோ தகாகியுடன் நடந்த சந்திப்பின்போது, தூதர் இந்த எண்ணிக்கையைப் பகிர்ந்துகொண்டதாக ஆப்கானிஸ்தான் தூதரகம் X தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் மேற்கோள் காட்டியுள்ளது.
தூதர் புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை என்றாலும், 2023-ல் பாகிஸ்தானின் நாடு திரும்புதல் திட்டம் தொடங்கப்பட்டதற்கும் செப்டம்பர் 2026-க்கும் இடையில் 27 லட்சத்திற்கும் அதிகமான ஆப்கானியர்கள் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் அதிகாரிகள் 2023-ன் பிற்பகுதியில் சட்டவிரோத வெளிநாட்டினர் நாடு திரும்புதல் திட்டத்தைத் தொடங்கினர். ஆரம்பத்தில், ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினர், முக்கியமாக சுமார் 17 லட்சம் ஆப்கானியர்கள், நவம்பர் 1-க்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் என்று எச்சரித்தது.
2025-ல், இந்தத் திட்டம் ஆப்கானிஸ்தான் குடிமக்கள் அட்டை வைத்திருப்பவர்களுக்கும், பின்னர் பதிவுச் சான்று அட்டைகளை வைத்திருக்கும் அகதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டது. இதற்கான காலக்கெடு முறையே மார்ச் 31 மற்றும் ஓகஸ்ட் 31 என நிர்ணயிக்கப்பட்டது.

