Saturday, November 21, 2026 12:39 pm
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்[ பிள்ளையான்], தனக்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்த மனுவை, 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.இந்த மனு தொடர்பாக சட்டமா அதிபருக்கு அறிவித்தல் அனுப்பி, அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிள்ளையான் ஓராண்டுக்கும் மேலாகக் காவலில் இருப்பதாக அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியதுடன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவருக்குப் பிணை வழங்குமாறும் கோரினார். அடுத்த விசாரணையின் முன்னதாக, இந்த மனுவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

