Monday, May 11, 2026 11:49 am
நாவலப்பிட்டி – கொத்மலை பிரதான வீதியின் கெரண்டிஎல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் விபத்துக்குள்ளாகி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகின்றது.
கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25பேர் உயிரிழந்திருந்தனர்.
விபத்துக்குள்ளான பேருந்தின் கீழ் சிக்கியிருந்த பெண்ணொருவர் தனது ஆறு மாத குழந்தையை இடுப்பின் கீழே பாதுகாத்து வைத்திருந்த புகைப்படம் வெளியாகி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

பல மணிநேரமாக தனது குழந்தையை பாதுகாத்து கடைசியில் தனது உயிரை தியாகம் செய்திருந்தார் அந்த தாய்.
இவ்விபத்து இடம்பெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைவதையொட்டி உயிரிழந்தவர்களுக்கு ஆத்ம சாந்தியும் காயமடைந்தவர்களுக்கு ஆசீர்வாதமும் வேண்டி விபத்து நடந்த இடத்திலேயே விசேட மத வழிபாடுகள் நடத்தப்பட்டன.


