Wednesday, November 25, 2026 4:41 pm
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் சினேகா ஜாய். இவர் கடந்த 2020ம் வருடம் கேரளாவில் இருந்தபோது ஊராட்சி தேர்தலில் கவுன்சிலருக்கு போட்டியிட்டார். அப்போது 13 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதன்பின் சினேகா ஜாய் கனடாவுக்கு குடி பெயர்ந்தார். அங்கு கணவருடன் வசித்து வரும் அவர் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில்தான் கனடா நாட்டின் LOTTO6/49 லொத்தரில் அவருக்கு 5 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் 30 கோடி ரூபா) அதிர்ஷ்டம் அடித்துள்ளது. வீட்டு கடனை அடைக்கவும், உலகம் முழுவதும் சுற்றுலா செல்லவும் பயன்படுத்துவேன் 30 கோடி ரூபாவைப் செலவளிக்கப்போவதாக ஸ்னேகா கூறினார்.

