Friday, November 6, 2026 2:04 pm
நடிகர் விஜய் இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வராகிவிட்டார். வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் கோட் படத்தில் நடித்தபோதே இதுதான் தனது கடைசி திரைப்படம் எனவும் விஜய் அறிவித்துவிட்டார்.
விஜய் அரசியலில் வெற்றி பெற்றது அவரின் ரசிகர்களுக்கு சந்தோஷம்தான் என்றாலும் விஜயை மீண்டும் திரைப்படங்களில் பார்க்க முடியாது என்கிற சோகம் அவர்களுக்கு இருக்கிறது. அதனால்தான், தாமதமாக ரிலீஸான ஜனநாயகன் படத்தை அவர்கள் திரையில் அப்படி ரசித்தார்கள்.
இந்நிலையில், விஜய் மீண்டும் நடிக்கப்போகிறார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், அது திரைப்படம் அல்ல. அரசு தொடர்பான விளம்பர படத்தில்தான் விஜய் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கவிருக்கிறார். அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலுக்கு பின் இந்த விளம்பர படத்திற்கான ஷூட்டிங் நடக்கவிருக்கிறது. முதல்வர் விஜய் இரண்டு நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

