Sunday, May 3, 2026 9:11 pm
சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியில் (SSCL) 2.5% உயர்வு ,அமெரிக்க டொலரின் தொடர்ச்சியான மதிப்பு உயர்வு ஆகியவற்றின் காரணமாக, இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் மே 1 முதல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயர் வரிவிதிப்பு , நாணய மதிப்பு ஏற்ற இறக்கங்களின் ஒருங்கிணைந்த தாக்கம், பிரபலமான வாகன மாடல்களின் சில்லறை விலைகளை கணிசமாகப் பாதிக்கும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மனேஜ் கூறினார்.
அவரது கூற்றுப்படி, ஹோண்டா வெசல் காரின் விலை சுமார் 3 இலட்சம் ரூபாவரையிலும், டொயோட்டா ரைஸ் காரின் விலை ஏறத்தாழ 2 லட்சம் ரூபா வரையிலும் உயரக்கூடும். அதே சமயம், சுஸுகி வேகன் ஆர் காரின் விலை சுமார் 1 இலட்சம் ரூபா வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவால் தவிக்கும் நுகர்வோர் மீது இந்த விலை உயர்வுகள் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், வாகனச் சந்தையில் தேவையைக் குறைக்கும் என்றும் இறக்குமதியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

