Sunday, May 3, 2026 8:49 pm
இந்திய எஃகுத் தொழிலதிபர் லக்ஷ்மி நாராயண் மிட்டல் , அவரது மகன் ஆதித்யா மிட்டல் ஆகியோர், ஆதார் பூனாவாலாவுடன் இணைந்து இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியான ராஜஸ்தான் ராயல்ஸைக் கையகப்படுத்துவதற்கான உறுதியான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 1.65 பில்லியன் அமெரிக்க டொலர், இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 5,660 கோடி ரூபா ஆகும்.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் சிஇஓ ஆதார் பூனாவாலாவுடன் இணைந்து இந்த மெகா டீல் நடந்துள்ளது. இந்த குழுமம், மனோஜ் படாலே மற்றும் அவரது சக முதலீட்டாளர்களிடமிருந்து அணியை வாங்கியுள்ளது. இந்த மதிப்பில், ஐபிஎல் அணி மட்டுமல்லாமல், தென்னாப்பிரிக்காவின் ‘பார்ல் ராயல்ஸ்’ , கரீபியன் பிரீமியர் லீக்கில் உள்ள ‘பார்படாஸ் ராயல்ஸ்’ ஆகிய ராயல்ஸ் குழுமத்தின் உலகளாவிய அணிகளும் அடங்கும்.த்தை எட்டியுள்ளதாகப் பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தத்தின்படி, மிட்டல் குடும்பம் சுமார் 75% உரிமையையும், பூனாவாலா சுமார் 18% உரிமையையும் கொண்டிருப்பார்கள். மீதமுள்ள 7% பங்கு, தற்போதைய முதன்மை உரிமையாளரான மனோஜ் படாலே உட்பட, ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களிடமே இருக்கும். அவர் ஒரு ஆலோசகராகத் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த பரிவர்த்தனை இன்னும் நிறைவடையவில்லை. மேலும், இது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இந்தியப் போட்டி ஆணையம் மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு ஆகியவற்றின் ஒழுங்குமுறை ஒப்புதல்களைப் பெற வேண்டியுள்ளது. இந்த ஒப்பந்தம் 2026-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

