Thursday, April 23, 2026 9:17 am
தவெக தலைவர் விஜய் பார்ச்சூனர் காரில்சென்று வாக்களித்தார். இந்த தேர்தலில் பெரம்பூர் ,திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார்.
நீலாங்கரையில் உள்ள அவர் வீட்டு வாசலிலும், வாக்குச்சாவடியிலும் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அவரது வீட்டு வாசல் முன்பு அவரது ரசிகர்கள், தொண்டர்களும் குவிந்து இருந்தனர். ஆனால் இந்த முறை அவர் சைக்கிளிலும் வரவில்லை, டிவிஎஸ் -50 பைக்கிலும் வரவில்லை. தனது பார்ச்சூனர் காரில் வாக்குசாவடிக்கு புறப்பட்டார். சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்குயில் விஜய் வாக்களித்தார்.

