Thursday, April 23, 2026 9:18 am
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்களித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் ரஜினிகாந்த் சென்னை ஆயிரம் விளக்கில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் இன்று காலை தனது வாக்கினை பதிவு செய்தார். அவர் வருவதற்கு முன்னதாகவே அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ஜனநாயகத்தில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அவர் பேசுகையில், “வாக்குரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் மிக முக்கியமான உரிமை மற்றும் கடமை. வாக்குரிமை இருக்கும் எல்லோரும் கண்டிப்பாக வந்து வாக்களிக்க வேண்டும்,” என்று உருக்கமாகக் குறிப்பிட்டார். பொதுவாக வாக்களிக்க செல்லும் முன் பிரபலங்கள் பேட்டி தர மாட்டார்கள். ஆனால் இன்று ரஜினி காரை நிறுத்தி பேட்டி கொடுத்துவிட்டு சென்றார். காலையே அவர் வந்து வாக்களித்தது அங்கிருந்த வாக்காளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

