Sunday, May 31, 2026 8:45 pm
ஜப்பான் மாணவர் சேவைகள் அமைப்பின் தரவுகளின்படி, மே 2025 நிலவரப்படி ஜப்பானில் உள்ள வெளிநாட்டுப் பரிமாற்று மாணவர்களின் எண்ணிக்கை 408,069 என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. இது 2033-க்குள் இந்த அளவை எட்ட வேண்டும் என்ற அரசாங்கத்தின் இலக்கை விட அதிகமாகவும், ஜப்பானிய மாணவர்களை விட அதிகமாகவும் உள்ளது.
யென்னின் மதிப்பு சரிவு , வெளிநாடுகளில் நிலவும் பணவீக்க அழுத்தங்களுக்கு மத்தியில், 2024 நிதியாண்டில் வெளிநாடுகளில் கல்வி பயிலும் ஜப்பானிய மாணவர்களின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டை விட 2.1 சதவீதம் அதிகரித்து 91,054 ஆக உயர்ந்துள்ளது. இது 2018-ஆம் ஆண்டின் உச்சபட்ச எண்ணிக்கையான 115,146-இல் சுமார் 80 சதவீதமாகும்.
கொவிட்-19 பெருந்தொற்று ஆரம்பத்தில் ஜப்பானுக்கு வரும் பரிமாற்று மாணவர்களின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. 2019-ல் சுமார் 310,000 ஆக இருந்த இந்த எண்ணிக்கை, 2022-ல் சுமார் 230,000 ஆகக் குறைந்தது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.
100,239 நேபாள மாணவர்களும், 43,366 வியட்நாம் மாணவர்களும் ஜப்பானில் உள்ளனர். தரவுகளின்படி, இலங்கை போன்ற தெற்கு , மேற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
மொத்தமாக 156,593 மாணவர்கள் பல்கலைக்கழகம், பட்ட மேற்படிப்பு அல்லது இளங்கலைக் கல்லூரிகளிலும், 140,174 மாணவர்கள் ஜப்பானிய மொழிப் பள்ளிகளிலும், 106,829 மாணவர்கள் தொழிற்பள்ளிகளிலும் சேர்ந்திருந்தனர்.
2023-ஆம் ஆண்டில், வெளிநாடுகளில் பயிலும் ஜப்பானிய மாணவர்களின் எண்ணிக்கையை 500,000 ஆகவும், நாட்டிற்கு வரும் வெளிநாட்டுப் பரிமாற்று மாணவர்களின் எண்ணிக்கையை 400,000 ஆகவும் அதிகரிப்பதை ஜப்பானிய அரசாங்கம் இலக்காக நிர்ணயித்துள்ளது.

