Sunday, May 31, 2026 8:30 pm
குளோபல் ஹாக் கண்காணிப்பு ட்ரோன்களை இயக்கும் அமெரிக்க விமானப்படைப் பிரிவு, இந்த கோடைக்காலம் முதல் குவாமில் உள்ள ஆண்டர்சன் தளத்திலிருந்து டோக்கியோவில் உள்ள யோகோட்டா விமானப்படைத் தளத்திற்கு மாற்றப்படும் என்று ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூன்று RQ-4 குளோபல் ஹாக் ஆளில்லா உளவு விமானங்களும்,, சுமார் 150 பணியாளர்களும், மேற்கு டோக்கியோவில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்திற்கு கட்டம் கட்டமாக மாற்றப்படும். இந்த இடமாற்றத்திற்காக புதிய வசதிகள் எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
உயரமான பகுதிகளில் நீண்ட நேரம் பறக்கும் திறன் கொண்ட இந்த ட்ரோன்கள், பரந்த பகுதி கண்காணிப்பு மற்றும் நீண்ட தூர உளவுத் தகவல்களைச் சேகரிக்கும் திறன் கொண்டவை.
இவை இதற்கு முன்னர், வடகிழக்கு ஜப்பானின் ஆமோரி மாகாணத்தில் உள்ள யோகோட்டா விமானப்படைத் தளம் , மிசாவா விமானப்படைத் தளம் ஆகியவற்றுக்கு தற்காலிகமாக அனுப்பப்பட்டிருந்தன.
ஜப்பானிய அமைச்சகத்தின்படி, தற்போதைய பிராந்திய பாதுகாப்புச் சூழலில், செயல்பாட்டுத் திறனையும் விரைவான பதிலளிப்புத் திறன்களையும் மேம்படுத்துவதன் மூலம் ஜப்பானைச் சுற்றியுள்ள உளவுத் தகவல் சேகரிப்பு , கண்காணிப்பு ஆகிய நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்றம் செய்யப்படுவதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

