Saturday, July 25, 2026 6:42 am
ஈரானுக்கு ஆயுதங்களை விற்க மாட்டேன் என்று சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் கூறியதை தான் நம்புவதாகப் பதிவிட்ட பிறகு, ஜனாதிபதி ஷி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகிய இருவரும் ஈரானுக்கு உதவ மாட்டார்கள் என்று தாம் நம்புவதாக ட்ரம்ப் கூறினார்.
“ஜனாதிபதி ஷி ஜின்பிங் இதில் பங்கேற்க மாட்டேன் என்று கூறினார், ஜனாதிபதி புட்டினும் அதையே கூறினார் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். எனக்குத் தெரியும், நான் அவர்களை நம்புகிறேன். அவர்களுக்குள் நீண்டகால உறவு இருக்கிறது, அவர்கள் சில விஷயங்களைச் செய்யக்கூடும். ஆனால் இதுவரை, குறைந்தபட்சம், அது பெரிய விஷயமாக இருந்ததில்லை. நான் ஏமாற்றமடைவதை அவர்கள் விரும்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை” என ட்ரம்ப் தெரிவித்தா.சீனாவும் ரஷ்யாவும் “வெவ்வேறு மட்டங்களில்” “ஈரான் செய்வதை ஊக்குவிக்கின்றன” என்று பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் கூறிய பின்னரே டரம் இதனைத் தெரிவித்தார்.

