Friday, November 6, 2026 1:33 pm
இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்க பாராளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. பிரதிநிதிகள் எனப்படும் கீழவை, செனட் எனப்படும் மேலவை ஆகிய இரண்டிலும் அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி தோல்வி அடைந்தது.
இந்நிலையில், தேர்தல் தோல்வி காரணமாக எலன் மஸ்க்கின் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. இதன் காரணமாக ஒரே நாளில் எலன் மஸ்க்கின் சொத்து மதிப்பு ரூ.35.2 பில்லியன் டொலர் குறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
ட்ரம்பின் ஆதரவாளரான அமெரிக்கா தொழிலதிபர் எலன் மஸ்க்கின் பணபலத்தையும் மீறி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜேம்ஸ் தாலரிகோ டெக்சாஸ் செனட் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். குடியரசுக் கட்சியின் கென் பாக்ஸ்டனை வெற்றிபெற வைக்க, தேர்தல் பிரசாரங்களுக்காக எலன் மஸ்க் சுமார் ரூ.1900 கோடி பணத்தை செலவு செய்திருந்தார். ஆனாலும் அவர் வெற்றிபெறவில்லை.

