Thursday, July 30, 2026 8:23 pm
இலங்கையின் தேசிய ஈட்டி எறிதல் சம்பியனான ருமேஷ் தரங்கா பத்திரகே, ஸ்காட்லாந்தில் நடைபெறும் 2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆடவர் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் 82.84 மீற்றர் தூரம் எறிந்து ரூமேஷ் முதல் இடத்தைப் பிடித்து, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
தகுதிச் சுற்றில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர்களான இந்தியாவின் நீரஜ் சோப்ரா , பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் ஆகியோரை ருமேஷ் முந்தினார். சோப்ரா 79.61 மீற்றர் தூரம் எறிந்து ஐந்தாவது இடத்தையும், நதீம் 78.63 மீற்றர் தூரம் எறிந்து ஏழாவது இடத்தையும் பிடித்தனர்.
இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற மற்ற வீரர்களில், 78.37 மீற்றர் தூரம் எறிந்து ஒன்பதாவது இடத்தைப் பிடித்த இந்தியாவின் ரோஹித் யாதவ், 78.36 மீற்றர் தூரம் எறிந்த யஷ்வீர் சிங் ஆகியோரும் அடங்குவர்.

