Sunday, September 20, 2026 1:14 pm
செல்லுபடியாகும் விஸா இன்றி குவைத்தில் தங்கியிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் நேற்று சனிகிழமை,[19] அதிகாலை நாடு கடத்தப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீட்டு வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைவாய்ப்புகளுக்காக குவைத் சென்றிருந்த இவர்கள், தங்கள் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களில் அங்கீகரிக்கப்பட்ட இடங்களைத் தவிர வேறு இடங்களில் பணிபுரிந்ததாகவும், செல்லுபடியாகும் விசா வைத்திருக்கவில்லை என்றும் கூறப்படும் நிலையில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நேற்று அதிகாலை 3.10 மணியளவில் குவைத் நகரிலிருந்து ‘அல் ஜசீரா ஏர்லைன்ஸ்’ (Al Jazeera Airlines) விமானம் JN-551 மூலம் நாடு கடத்தப்பட்டு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விமான நிலையத்திற்கு வந்தடைந்ததைத் தொடர்ந்து, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) இவர்களுக்குத் தேவையான நிதியுதவி வழங்குவது உட்பட, அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது.

