Sunday, September 20, 2026 12:54 pm
மத்திய கிழக்கில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த பந்தயங்கள் குறித்த நிச்சயமற்ற நிலை நீடித்தாலும், ஃபார்முலா 1 தனது 2027 சீசனை பஹ்ரைனில் தொடங்க திட்டமிட்டுள்ளது.
F1, 2027-ஆம் ஆண்டுக்கான 24 பந்தயங்கள் கொண்ட அட்டவணையை புதன்கிழமை வெளியிட்டது. இது மார்ச் 14 ஆம் திகதி பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸுடன் தொடங்கி, ஒரு வாரம் கழித்து சவூதி அரேபியாவில் நடைபெறும். ஆண்டின் இறுதியில் கட்டாரிலும், அபுதாபியிலும் பந்தயங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் F1 பந்தயங்களை நடத்துவதற்கான நீண்ட கால ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன. பஹ்ரைன் பெப்ரவரியில் சீசனுக்கு முந்தைய சோதனை ஓட்டங்களையும் நடத்துகிறது.
ஈரான் போர் காரணமாக இந்த ஆண்டு பஹ்ரைனிலும் ,சவூதி அரேபியாவிலும் நடைபெறவிருந்த பந்தயங்கள் இரத்து செய்யப்பட்டன. அடுத்த மாதம் மலேசியாவில் நடைபெறும் ஒரு கூடுதல் பந்தயம் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் என்ற பெயரில் நடத்தப்படும்.
நவம்பர் 29 அன்று நடைபெறும் கத்தார் கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் டிசம்பர் 6 அன்று நடைபெறும் சீசனின் இறுதிப் பந்தயமான அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ் ஆகியவை அட்டவணையில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பந்தயங்களை நடத்த முடியாவிட்டால், ஐரோப்பாவிற்கு மாற்றுவது குறித்து F1 பரிசீலித்து வருகிறது, ஆனால் இரண்டு பந்தயங்களுக்குமான டிக்கெட்டுகள் தொடர்ந்து விற்பனையில் உள்ளன.
சமீபத்திய ஆண்டுகளில் பெரும்பாலான F1 சீசன்களை பஹ்ரைன்தான் தொடங்கி வைத்துள்ளது. முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதம் காரணமாக 2025 , 2026ஆண்டுகளில் மட்டுமே அந்த இடத்திலிருந்து அது மாற்றப்பட்டது.

