Wednesday, November 18, 2026 12:21 pm
திருகோணமலை ,ட்டக்களப்பு ஊடாக காங்கேசன்துறையிலிருந்து பொத்துவில் வரையான ஆழ்கடல் , கரையோரப் பகுதிகளில், பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை நிலவும் என்பதால், வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
‘அக்வான்’ (Akvan) சூறாவளி, தீவிர சூறாவளியாக வலுவடைந்துள்ளது. இன்று புதன்கிழமை (18) காலை 5.30 மணியளவில், திருகோணமலையிலிருந்து சுமார் 650 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது.
கடற்படையினர், மீனவ சமூகத்தினர் ஆகியோடோர் பாதிக்கப்பட்ட கடல் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்து, மறு அறிவித்தல் வரும் வரை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

