Wednesday, November 18, 2026 10:08 pm
சவூதி அரேபியாவில் நிலவும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, ஜெட்டா, மதீனா, ரியாத் , தமாம் ஆகியநகரங்களுக்குச் செல்லும் ,அங்கிருந்து வரும் அனைத்து விமானச் சேவைகளும் நவம்பர் 30ம் திகதி வரை இரத்து செய்வதாக இண்டிகோ அறிவித்து உள்ளது.
இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் முன்பதிவு செய்யும் போது வழங்கிய தொடர்பு விவரங்கள் வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து தகவல்களை வழங்கவும், தேவையான உதவிகளைச் செய்யவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
நாங்கள் தொடர்ந்து நிலவரத்தைக் கூர்ந்து கவனித்து வருகிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே எங்களின் மிக உயர்ந்த முன்னுரிமையாகும். இவ்வாறு இண்டிகோ தெரிவித்துள்ளது.

