Wednesday, November 18, 2026 4:08 pm
இலாத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக, வண. கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட நான்காண்டு கடுங்காவல் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
2024-ஆம் ஆண்டில் கொழும்பு உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளக் கோரி தேரர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி கிருலபோனில் குரகல கோயில் தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக, சட்டமா அதிபரால் அவர் மீது தண்டனைச் சட்டத்தின் 291-வது பிரிவின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இஸ்லாமிய மதத்தை அவமதித்ததாகவும், வெவ்வேறு இனங்கள் மற்றும் மத சமூகங்களிடையே நல்லிணக்கத்திற்குப் பாதகமான கருத்துக்களைத் தெரிவித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவரைக் குற்றவாளி எனக் கண்டறிந்த கொழும்பு உயர் நீதிமன்றம், 2024-ஆம் ஆண்டில் அவருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது.
அதனைத் தொடர்ந்து அவர், குற்றத்தீர்ப்பு மற்றும் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்தார்.

