Wednesday, November 18, 2026 10:38 pm
ருவன்வெலி மகா சேயவுக்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, ராஜங்கனே சத்தாரத்தனவை அனுராதபுர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தூண்டியதாகக் கூறப்படும் நபர்களைக் கைது செய்யத் தவறியமை குறித்து விளக்கம் அளிக்குமாறும், நவம்பர் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும், குறித்த பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அனுராதபுர பிரதம நீதவான் உத்தரவிட்ட மறுநாளே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த ஏழு சந்தேக நபர்களின் பிணை விண்ணப்பங்களை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

