Tuesday, November 17, 2026 10:47 pm
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமரும், தெரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், நீதித்துறைக்கு எழுதியுள்ள உருக்கமான கடிதம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023 முதல் சிறையில் உள்ள அவர், கடந்த ஆண்டு டிசம்பர் முதல் தினமும் சுமார் 22 மணி நேரம் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். குடும்பத்தினர், வழக்கறிஞர்கள் மற்றும் மகன்களுடன் பேசவோ, புத்தகங்கள் படிக்கவோ தனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
தமக்கு ஏற்பட்டுள்ள கடும் இரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மூளையில் இரத்தக்கசிவு அல்லது மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாக இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மனைவி புஷ்ரா பீபிக்கு உடனடியாகக் கண் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் பார்வை நிரந்தரமாக பறிபோகும் அபாயம் உள்ளதாகவும், ஆனால் சிறை நிர்வாகம் உரிய மருத்துவ சிகிச்சையை மறுத்து வருவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தி தமக்கும் மனைவிக்கும் முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், காலம் தாழ்த்தாமல் மனிதாபிமான அடிப்படையில் நீதி வழங்க வேண்டும் என்றும் அவர் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

