Tuesday, August 18, 2026 4:07 pm
இலங்கை அணிக்கு எதிராக காலி மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தனது அதிரடி அரைசதத்தின் மூலம் புதிய உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இப்போட்டியில் தனது 20-வது டெஸ்ட் அரைசதத்தைக் கடந்த அவர், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 100-வது சிக்ஸரையும் விளாசினார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 சிக்ஸர்களை விளாசிய முதல் இந்திய என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார்.
தனது 51-வது டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம், உலகிலேயே மிகக் குறைந்த போட்டிகளில் 100 டெஸ்ட் சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார். ரிஷப் பண்ட் அடித்த இமாலய சிக்சர்.. மைதானத்தை தாண்டி தெருவில் விழுந்த பந்து போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் லாங் லெக் திசையில் வீசப்பட்ட பந்தை சிக்ஸருக்குப் பறக்கவிட்டு அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 சிக்ஸர்கள் அடித்த ஒட்டுமொத்த வீரர்களின் வரிசையில் ரிஷப் பண்ட் தற்போது இணைந்துள்ளார். இவருக்கு முன்னதாக பென் ஸ்டோக்ஸ், பிரண்டன் மெக்கல்லம் ,அடம் கில்கிறிஸ்ட் ஆகிய மூன்று சர்வதேச வீரர்கள் மட்டுமே இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 138 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கல்லம் 107 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும், அவுஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் , இந்தியாவின் ரிஷப் பண்ட் ஆகியோர் தலா 100 சிக்ஸர்களுடன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.
அதிரடி காட்டிய ரிஷப் பண்ட் 69 பந்துகளில் 66 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.

