Tuesday, October 6, 2026 5:08 pm
முன்னாள் உள்நாட்டு உளவுத்துறைத் தலைவர் ஆகஸ்ட் ஹானிங், உளவு குற்றச்சாட்டின் பேரில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக ஜேர்மனியின் கூட்டாட்சி வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் ஹானிங், டிசம்பர் 1998 முதல் நவம்பர் 2005 வரை கூட்டாட்சி புலனாய்வு சேவையின் (BND) தலைவராக இருந்தார்.
“அவர் மீது தேசத்துரோக உளவு, அரசு இரகசியங்களை வேவு பார்த்தல், தேசத்துரோக முயற்சி மற்றும் உளவு ஆகிய குற்றச்சாட்டுகள் வலுவாக சந்தேகிக்கப்படுகின்றன” என்று கூட்டாட்சி வழக்கறிஞர் அலுவலகம்அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தெற்கு ஜேர்மனியில் உள்ள பேட் டோல்ஸ்-வோல்ஃப்ராட்ஷௌசனில் ஹானிங் கைது செய்யப்பட்டார். அவரது முன்னாள் உதவியாளரான, மான்ஃபிரெட் டி என மட்டும் அடையாளம் காணப்பட்ட ஒருவரும், மேற்கு ஜேர்மனியில் உள்ள ஸ்டெய்ன்ஃபர்ட்டில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
மான்ஃபிரெட் டி மீது, தேசத்துரோக முயற்சி மற்றும் தேசத்துரோக உளவு நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

