Tuesday, October 6, 2026 2:14 pm
ஐபிஎல் 2027 சீசனுக்கான தலைமைப் பயிற்சியாளராக சௌரவ் கங்குலியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி செவ்வாய்க்கிழமை அறிவித்தது .
இரண்டு சீசன்களுக்கு தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஹேமங் பதானிக்குப் பதிலாக, கங்குலி 2025 மற்றும் 2026-ல் பொறுப்பேற்பார். பதானியின் இரண்டு ஆண்டு காலப் பதவிக்காலத்தில், டிசி அணி பிளேஆஃப்களுக்குத் தகுதி பெறத் தவறியது.
அந்த அணி 2025-ஆம் ஆண்டு பருவத்தில் ஐந்தாவது இடத்தையும், 2026-ஆம் ஆண்டு பருவத்தில் ஆறாவது இடத்தையும் பிடித்தது.
கேப்பிட்டல்ஸ் அணியுடனான கங்குலியின் தொடர்பு பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. 2019-ல் ஆலோசகராக அந்த அணியில் இணைந்த அவர், பல ஆண்டுகளாக அதன் நிர்வாகச் சூழலில் பல்வேறு தலைமைப் பதவிகளை வகித்து வருகிறார்.
முன்னாள் இந்திய கப்டனான இவர், 2023 முதல் 2024 வரை டெல்லி கேபிடல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநராக ஆண்கள் , பெண்கள் அணிகளை மேற்பார்வையிட்டார், மேலும் 2025 சீசனில் எஸ்.ஏ.20 தொடரில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் இருந்தார்.

