Tuesday, October 6, 2026 5:43 pm
இரண்டு வார காலப் போட்டிகளுக்குப் பிறகு, ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையன்று நிறைவடைந்தன. இதில் சீனா தொடர்ந்து 12-வது முறையாக தங்கப் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
சீனா மொத்தம் 169 தங்கம், 89 வெள்ளி , 83 வெண்கலப் பதக்கங்களை வென்றது; இது அந்நாடு வெளிநாட்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற மிகச்சிறந்த பதக்க எண்ணிக்கையாகும். 83 தங்கம், 95 வெள்ளி, 91 வெண்கலப் பதக்கங்களுடன் ஜப்பான் இரண்டாம் இடத்தையும், 39 தங்கம், 43 வெள்ளி , 68 வெண்கலப் பதக்கங்களுடன் தென் கொரியா மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
இப்போட்டிகளின் மிகச்சிறந்த வீரராக (Most Valuable Player) தாய்லாந்து ஓட்டப்பந்தய வீரர் பூரிபோல் பூன்சன் (Puripol Boonsஒன்) ,மிகச்சிறந்த வீராங்கனையாக சீன நீச்சல் வீராங்கனை யூ ஜிடி (Yu Zidi) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

