Monday, October 5, 2026 4:47 pm
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை இரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அவருக்கு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு சிறைத் தண்டனையை இன்று திங்கட்கிழமை (05) முதல் நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, சிறைச்சாலை அதிகாரிகள் ஞானசார தேரரை வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.
சட்டமா அதிபரின் கோரிக்கையை ஏற்று, நீதிபதிகள் மாயாதுன்ன கொரியா மற்றும் லக்மாலி கருணாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு கோரி, சட்டமா அதிபர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

