Saturday, May 2, 2026 8:28 pm
மலாபேயில் உள்ள சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் அமைந்துள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் அருகே, பொறுப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சி நடத்தியதற்காக, 22 இளைஞர்களை கடுவெல பொலிஸார் கைது செய்தனர்.
பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், சிரமப்படுத்தும் வகையிலும் ஒரு குழுவினர் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சியை நடத்தி வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின்போது இந்தக் கைதுகள் நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாட்ஸ்அப் குழு மூலம் இது ஒருங்கிணைத்திருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சாகச நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட பல மோட்டார் சைக்கிள்களையும், பதிவு செய்யப்படாத இரண்டு வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.
கடுவெல பகுதிக்கு வெளியே வசிக்கும் சந்தேக நபர்கள் அனைவரும் பொலிஸ் பிணையில் விக்கப்பட்டனர். மே 5 ஆம் திகதி கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

