Tuesday, June 16, 2026 9:02 pm
சீனாவில் உள்ள ஒரு வயதான பெண்மணி ஒருவர் ஒரு வீட்டில் பாத்திரம் கழுவும் வேலை செய்கிறார். அந்த வேலை செய்வதற்கு நான்கு கோடி ரூபா மதிப்புள்ள Bentley காரில்தான் அஎல்கிறார். இது தொடர்பான வீடியோ வெளியானதையடுத்து இவர் சீனாவில் வைரலாகி வருகிறார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்த பெண்மணி ‘நான் வசதியாக பின்னணியை கொண்டவள்தான். ஆனாலும் வீட்டில் சும்மா இருக்க பிடிக்கவில்லை.. சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வேலையை செய்து வருகிறேன். என்று கூறியிருக்கிறார்.
அவரின் இந்த எளிமையையும், வேலையின் மீது அவர் காட்டும் ஆர்வத்தையும் சீன மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

