Saturday, May 9, 2026 7:51 pm
மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பெ.விஸ்வநாதனை “அமைச்சர்” என குறிப்பிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கிரது.தவெக ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைப்பே விடுக்காத நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏவை அமைச்சர் என அழைத்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர் பதவி கொடுக்கபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதன்படி காங்கிரஸ் கட்சி சார்பில் மேலூர் தொகுதியில் போட்டியிட்ட விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என காங்கிரஸ் வட்டாரங்களில் பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது. 35 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மேலூர் தொகுதியை கைப்பற்றியுள்ளது என்பதோடு, பொது தொகுதியில் பட்டியலினத்தை சேர்ந்தவர் வெற்றி பெற்றார் என்பதால் விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பெ.விஸ்வநாதனை “அமைச்சர்* என குறிப்பிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இன்னும் விஜய் முதலமைச்சராக பதவியேற்க அழைப்பு விடுக்கப்படாத சூழலில் இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

