Sunday, November 8, 2026 5:04 pm
அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 15ம் திகதி தொடங்கவிருக்கிறது. வருகிற 24ஆம் திகதி மகா தீபம் ஏற்றப்படவிருக்கிறது. எனவே அங்கு பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை அண்ணாமலை கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. வருகிற 15ம் தேதி கொடியேற்றத்துடன் அங்கு தீபத் திருவிழா தொடங்குகிறது. வருகிற 24-ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு கோவிலின் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மேலும் அன்று மாலை 6 மணி அளவில் கோயிலின் பின்புறம் உள்ள மலை மீது மகா தீபம் ஏற்றப்படவிருக்கிறது.
இதைக்கண்டு களிக்க தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் கணித்துள்ளது.

