Friday, November 6, 2026 1:28 pm
தமிழ்நாடு முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய், நடிகை திரிஷா ஆகியோர் சென்னையில் நடைபெற்ற பிரபல அரசியல் தலைவர் ஒய்.எஸ். அனில் ரெட்டியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அனில் ரெட்டி, ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் ஆவார்.
சென்னையிலுள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில், விஜய் பிரவுன் நிற சூட் உடையில் தனது தாயார் சோபா சந்திரசேகருடன் வருகை தந்தார். நடிகை திரிஷா இளஞ்சிவப்பு நிற சேலையில் பங்கேற்றார். இருவரும் மணமக்கள் ஸ்ரேயா , உஜ்வல் ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
விழாவின் போது, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியைச் சந்தித்த முதலமைச்சர் விஜய், அவருடன் உரையாடி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் கௌதம் அதானி, பிஆர்எஸ் முதன்மைச் செயலாளர் கே.டி. ராமா ராவ் உள்ளிட்ட பல முன்னணி அரசியல் மற்றும் வணிகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

