Sunday, September 20, 2026 1:10 pm
துருக்கியில் நடைபெற்ற “டாப் மொடல் ஆஃப் யுனிவர்ஸ் – 2026” (Top Model of Universe – 2026) போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை மொடல் சவிந்த தென்னகோன், மூன்றாம் இடத்தைப் பிடித்ததுடன் ‘சிறந்த தேசிய ஆடை’ (Best National Costume) விருதையும் வென்று நாடு திரும்பினார்.
இப்போட்டி இஸ்தான்புல்லில் செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெற்றது; இதில் 33 நாடுகளைச் சேர்ந்த மொடல்கள் பங்கேற்றனர்.
தென்னகோன் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை சுமார் 5.10 மணியளவில் துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-730 மூலம் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரது பெற்றோரும், போட்டியின் தேசிய இயக்குநரான மயூர பெரேராவும் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர்.
தென்னகோன் தற்போது இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் (Computer Science) பயின்று வருகிறார்.

