Wednesday, November 25, 2026 4:25 pm
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கு தொடர்பாக தனக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை மறைத்ததாகவும், விசாரணைகளைத் திசைதிருப்பியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் அரச புலனாய்வு சேவை இயக்குனர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டது.

