Friday, November 6, 2026 7:41 am
நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மனோஜ் முத்துகுமார என்பவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மனோஜ் முத்துக்குமார, ‘கைவாரு முத்து’ (Kaiwaru Muthu) என்றும் அழைக்கப்படுபவர், ஷார்ஜாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஷார்ஜாவில் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முத்துக்குமார, அங்கிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக அவர் மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.

