Friday, November 6, 2026 7:46 am
இலங்கையின் பல பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை(06) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் 75 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்படி, தெற்கு , கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில், பிற்பகல் 1.00 மணிக்கு மேல் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்தத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மேல், சபரகமுவ ,வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி,நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சபரகமுவ, மத்திய , ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான சூழல் நிலவக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

