Sunday, November 22, 2026 10:44 pm
தெற்கு நைஜீரியாவில் இறுதிச் சடங்கிற்கு மக்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 24 பேர் உயிரிழந்ததாக அவசரகால சேவைகள் சனிக்கிழமை தெரிவித்தன.
நாட்டின் தென் தெற்குப் பகுதியில் உள்ள பேயல்சா மாநிலத்தில், ஒரு சமூகத்திலிருந்து மற்றொரு சமூகத்திற்கு இறுதிச் சடங்கிற்காக பயணிகளை ஏற்றிச் சென்றபோது வெள்ளிக்கிழமை படகு மூழ்கியதாக நைஜீரியாவின் தேசிய அவசரகால மேலாண்மை முகமையின் செய்தித் தொடர்பாளர் மன்சோ எசெகி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.காணாமல் போனவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடாமல், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
மேலும் 24 பேர் மீட்கப்பட்டு மருத்துவ உதவி அளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் மூசா முகமது வெள்ளிக்கிழமை தெரிவித்தார். படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிப்பதாக முகமது கூறினார்.
படகைக் கரை நோக்கிச் செலுத்துமாறு படகைச் செலுத்தியவரிடம் பயணிகள் கேட்டதாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் முகமது தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து படகைச் செலுத்தியவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

